என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » முக்தார் அப்பாஸ் நக்வி
நீங்கள் தேடியது "முக்தார் அப்பாஸ் நக்வி"
‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வியை தலைமை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்துள்ளது. #ElectionCommission #MukhtarAbbasNaqvi
புதுடெல்லி:
மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, கடந்த 3-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசும்போது, ‘மோடியின் ராணுவம்’ என்ற வார்த்தைகளை பயன்படுத்தினார்.
இதுதொடர்பாக அவருக்கு மாநில தேர்தல் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அந்த வார்த்தைகளை பயன்படுத்தியதை நக்வி ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், அவரை தலைமை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்துள்ளது. அந்த உத்தரவில் தேர்தல் கமிஷன் கூறியிருப்பதாவது:-
ராணுவம் தொடர்பாக தேர்தல் பிரசாரங்களில் பேசுவதை தவிர்க்குமாறு ஏற்கனவே கூறி இருந்தோம். அதையும் மீறி அப்படி பேசிய முக்தார் அப்பாஸ் நக்வியை எச்சரிக்கிறோம். எதிர்காலத்தில், அரசியல் பிரசாரத்துக்கு ராணுவத்தை பயன்படுத்தாமல் கவனமாக இருக்குமாறு அவரை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectionCommission #MukhtarAbbasNaqvi

முஸ்லிம் லீக் கட்சியின் மதவாத, பிரிவினைவாத அரசியலுக்கு ‘மதச்சார்பின்மை’ என்ற சான்றிதழ் அளிக்க ராகுல் காந்தி முயற்சிப்பதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி குறிப்பிட்டுள்ளார். #Rahul #secularcertificate #communalpolitics
திருவனந்தபுரம்:
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி எம்.பி.யாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி வகித்து வருகிறார். இந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடும் அவர் கேரள மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் வற்புறுத்தலுக்கிணங்க அங்குள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
ராகுல் காந்தியை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் துஷார் வெள்ளப்பள்ளி களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வயநாடு தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, முஸ்லிம் லீக் கட்சிக்கு ராகுல் காந்தி மதச்சார்பின்மை சான்றிதழ் அளிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிக் லீக் போன்ற மதவாத கட்சிகளுடன் மீண்டும் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் முதல்முறையாக கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் முஸ்லிம் லீக்கை முன்னர் அங்கம் வகிக்கச் செய்து, அங்கீகரித்தது போல் இப்போதும் ராகுல் காந்தி தலைமையிலான இந்த கட்சி முஸ்லிம் கட்சியின் மதவாத அரசியலை நியாயப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
முஸ்லிக் லீக்கின் மதவாத, பிரிவினைவாத அரசியலுக்கு ‘மதச்சார்பின்மை' என்ற சான்றிதழை அளிக்க முயற்சிக்கும் ராகுல் காந்தி வெறும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக நேற்று வயநாட்டுக்கு வரவில்லை.
மதவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை பரப்பும் நோக்கத்தில் அவர் இங்கு வந்து சென்றுள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ எனவும் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். #Rahul #secularcertificate #communalpolitics #divisivepolitics #MuslimLeague #Naqvi
நாட்டிற்கு ஒப்பந்த பிரதமர் தேவையில்லை என்றும் சரியான நிரந்தரமான பிரதமரே தேவை என்றும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.#BJP #MukhtarAbbasNaqvi #Congress
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான முக்தார் அப்பாஸ் நக்வி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டின் வளம், பாதுகாப்பு, வளர்ச்சி என அனைத்திலும் சிறப்பாக செயலாற்றும் பிரதமர் மோடி தான் அந்த சரியான நிரந்தர பிரதமர் என நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா அரசியல் சுற்றுலா மேற்கொள்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி திட்டப்பணிகளை செய்வது குறித்து தவறான வசைப்பாடும் கும்பலாக காங்கிரஸ் கட்சியினர் மாறி விட்டனர்.
மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான மோடியின் நடவடிக்கைகளை காங்கிரசால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. இந்த செயல்களை கண்டு மனசோர்வடைந்த காங்கிரஸ் கட்சியினர் மோடிக்கு எதிரான மோசமான பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #MukhtarAbbasNaqvi #Congress

காங்கிரசுக்கு சொல்வதை தட்டாமல் செய்யும் ஒருவர் பிரதமராக வேண்டும். நாட்டிற்கு சுழற்சி முறையிலோ, மாற்று முறையிலோ வருடத்தின் முதல் 6 மாதத்திற்கு ஒரு பிரதமர், அடுத்த 6 மாதத்திற்கு வேறொரு பிரதமர் என தேவையில்லை. காங்கிரசுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பிரதமர் வேண்டும். ஆனால் நாட்டிற்கு நிரந்தர பிரதமர் தான் வேண்டும்.
நாட்டின் வளம், பாதுகாப்பு, வளர்ச்சி என அனைத்திலும் சிறப்பாக செயலாற்றும் பிரதமர் மோடி தான் அந்த சரியான நிரந்தர பிரதமர் என நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா அரசியல் சுற்றுலா மேற்கொள்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி திட்டப்பணிகளை செய்வது குறித்து தவறான வசைப்பாடும் கும்பலாக காங்கிரஸ் கட்சியினர் மாறி விட்டனர்.
மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான மோடியின் நடவடிக்கைகளை காங்கிரசால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. இந்த செயல்களை கண்டு மனசோர்வடைந்த காங்கிரஸ் கட்சியினர் மோடிக்கு எதிரான மோசமான பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #MukhtarAbbasNaqvi #Congress
×

X